பொதுமக்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்

களனிவெளி புகையிரத வீதியில் அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரையிலான பகுதியில் இலங்கை புகையிரத சேவைக்குச் சொந்தமான காணிகளில் புதிய நிர்மாணங்களை மேற்கொள்ளாமலும் புதிதாகக் குடியேறாமலும் இருப்பதற்கான நிர்ணயிக்கப்பட்ட திகதியொன்றை பொதுமக்களுக்கு அறியத்தருவதற்காகப் பிரகடனப்படுத்துதல்.
வினைத்திறனான பயணிகள் போக்குவரத்துச் சேவையை ஏற்படுத்தும் நோக்கில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு / இலங்கை புகையிரத சேவை ஆகிய நிறுவனங்களால், அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரையிலான களனிவெளி புகையிரதப் பாதையை மீளமைத்து அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானித்துள்ளன.
அதற்கமைய, அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரைச் செல்லும் பழைய களனிவெளி புகையிரத வீதிக்குரிய புகையிரத ஒதுக்கீட்டுப் பகுதிக்குள் அல்லது இப்பகுதியில் இலங்கை புகையிரத சேவைக்குச் சொந்தமான காணிகளில் புதிய நிர்மாணங்களை மேற்கொள்ளுதல், புதிதாகக் குடியேறுதல் அல்லது அவற்றைப் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டாம் என பொதுமக்களுக்கு இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.
2026.09.18 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்ட திகதியாகக் கொள்ளப்படுவதுடன், இத்திகதிக்குப் பின்னர் இலங்கை புகையிரத சேவைக்குச் சொந்தமான இக்காணிகளில் குடியேறுபவர்கள், நிர்மாணங்களை மேற்கொள்பவர்கள் அல்லது அவற்றைப் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்பவர்கள் (கைமாற்றுதல், பாராதீனப்படுத்துதல், விற்பனை செய்தல் அல்லது கொள்வனவு செய்தல்) எவரும், மீள்குடியமர்த்தும் செயற்பாட்டின்போது கருத்திட்டத்தினால் வழங்கப்படும் நன்மைகளைப் பெறுவதற்கு உரித்துப்பெறமாட்டார்கள் என்பதும் இதன்மூலம் மேலும் அறிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிகத் தகவல்களை இலக்கம் 217, கொட்டா வீதி, கொழும்பு 08 இல் அமைந்துள்ள கொழும்பு புறநகர் புகையிரதக் கருத்திட்டத்தின், கருத்திட்ட முகாமைத்துவ அலகின், கருத்திட்ட பணிப்பாளர் ஊடாகவோ அல்லது 011-2056240 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ விசாரித்துப் பெற்றுக்கொள்ளலாம்.
செயலாளர்,
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு,
07 ஆம் மாடி,
"செத்சிறிபாய", கட்டம் II,
பத்தரமுல்லை.
2026.09.14





