எமது நோக்கம்

நல்லாட்சியின் ஊடான செழிப்பு

 

எமது குறிக்கோள்

இரத்தினபுரி மாவட்ட மக்களின் வாழ்கைத்தரத்தினை மேம்படுத்துவதற்காக அரச கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்திரனான பங்களிப்புடன் பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தல்.

 

சப்பிரகமுவ மாகாணத்தின் தலைநகரம் இரத்தினபுரி ஆகும். இது தலைநகர் கொழும்பின் தென்கிழக்கில் இருந்து 101 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.இதன் தற்கால பெயரானது சிங்கள மொழியில் இருந்து  பெறப்பட்டதாக சிலரால் கூறப்படுகின்றது. அதாவது “ரத்ன” என்பது மாணிக்கம் “புர” என்பது நகரம் என்பதாகும்.

இந்நகரானது ரூபி, சபயார் மற்றும் ஏனைய கற்கள் உட்பட விலைமதிக்க முடியாத இரத்தினக்கல் அகழ்வினை கொண்ட நீண்டகால தொழிற்துறையினை மையப்படுத்தியதாக உள்ளது. இரத்தினக்கல் அகழ்வு தவிர தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்திக்கும் இது பெயர்பெற்ற நகரமாகும். இந்நகரை சூழ்ந்து தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களே காணப்படுகின்றது.இப் பிரதேசத்தின் தேயிலை தாழ் நாட்டு தேயிலை என்றழைக்கப்படுகின்றது. இது சுற்றுலாத்துறைக்கும் சிறந்து விளங்குகின்றது.சிவனொளிபாதமலை, சமன் தேவாலயம், சிங்கராஜ காடு, போபத்தெல்ல நீர்வீழ்ச்சி, உடவலவ தேசிய பூங்கா போன்றன பெயர்பெற்ற சுற்றுலாத்தலங்களில் சிலவாகும்.

நகரத்தில் வசிக்கும் மக்கள் இரத்தினக்கல் வாணிபத்தினை சார்ந்தே உள்ளனர். இச் சுற்றுப் புற சூழலில் பெரிதும் மாணிக்க அகழ்வு குழிகளை காணக்கூடியதாக இருக்கும்.இலங்கையின் பாரிய அளவிலான இரத்தினக்கல் வர்த்தகர்கள் இரத்தினபுரி நகரத்திலேயே உள்ளனர்.இங்கு குறிப்பிடத்தக்களவு வெளிநாட்டு வர்த்தகர்களும் காணப்படுகின்றனர். வெளிநாட்டு வர்தகர்களில் பெரும்பாலானோர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களாவர். பெரும்பாலான புறநகர் பகுதியில் மற்றும் ஏனைய நகரத்தில் வசிக்கும் வர்த்தகர்கள்   ஒவ்வொரு நாளும் இரத்தினக்கற்கள் விற்பனைக்கு மற்றும் கொள்வனவிற்கு இந் நகரத்திலேயே கூடுகின்றனர். பாரிய அளவில் வாணிபம் செய்பவர்கள் உள்நாட்டவரிடமிருந்து இரத்தினங்களை கொள்வனவு செய்து சர்வதேச சந்தையில் விற்பனை செய்கின்றனர். சிலர் இந்நகரத்தில் இருந்து வெளியே சென்றும் இரத்தினங்களை கொள்வனவு செய்கின்றனர்.

இந்நகரமானது இலங்கையின் தென்-மேற்கு பகுதியில், ஈர வலயத்தில் அமைந்துள்ளது.இது மே மாதம் முதல் செப்டம்பர் வரையான தென் மேற்கு பருவமழையினை பெறுகின்றது.மழை வீழ்ச்சியில் வெப்ப மண்டல மழையும் பெரிதும் செல்வாக்கு செலுத்துகின்றது.சராசரி வெப்பநிலை 240 இருந்து 35ஆக காணப்படும் அதேவேளை அதிக ஈரப்பதத்தினையும் கொண்டதாக உள்ளது.

நகரத்தினை சூழவும் நகரத்திற்கு வெளியே பெரும் எண்ணிக்கையிலான  வணக்கஸ்தலங்கள் காணப்படுகினறன. எண்ணிக்கையில் அதிகமாக புத்த விகாரைகள் காணப்படுவது இங்கு பெரும்பான்மை பௌத்தர்களே என்பதனை உறுதி செய்கின்றது. இங்கு குறிப்பிடத்தக்களவு ஏனைய மதங்களைச் சார்ந்த வணக்கஸ்தலங்களும் உள்ளது.கீழே குறிப்பிடப்படுவன முக்கிய உதாரணங்களாகும்.

சிவனொளிபாத மலை

சமன் தேவாலயம்

தெல்கமுவ விகாரை​

பொத்குல் விகாரை

திவா குகை

நீர்வீழ்ச்சி

கொழும்பு இரத்தினபுரி பிரதான வீதியில் குருவிட்ட நகரத்திற்கு  அண்மையில் ஹிக்கஸ்சென்ன பிரதேசத்தில் இடது பக்கமாக சுமார் 2 கி.மீ தொலைவில் போபத்தெல்ல நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.இந் நீர்வீழ்ச்சி நாட்டின் அனைத்து சுற்றுலா பயணிகளையும் கவர்வதாக காணப்படுகின்றது.இங்கு குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் அதேவேளை திடீர் வௌள பெருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்படும். ஆபத்து இருந்தாலும் இதன் அழகு இந் நகரத்தின் ஒரு இரத்தினமாகும்.இங்கு மேல் இருந்து கீழ் நோக்கி விழும் அருவியானது அரச மர இலையின் வடிவத்தை கொண்டதாக காணப்படுவதே இதன் பெயர் உருவாக காரணமாக உள்ளது.

கடுகஸ்எல்ல

இரத்தினபுரி நகரத்தில் இருந்து 03 கி.மீ தொலைவில் உள்ள மாவளை பிரதேசத்தில் உள்நாட்டவர்களிடையே பிரசித்திப்பெற்ற இந் நீர்வீழ்ச்சி காணப்படுகின்றது.

கிரிந்தி எல்ல

இது இலங்கையின் ஏழாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும். இரத்தினபுரி பெல்மடுல்ல வீதியில் இருந்து 04 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.​

ரஜனவ

இரத்தினபுரி கலவான பிரதான பாதையில் மாரப்பன பிரதேசத்தில் இது அமைந்துள்ளது. இவ் அழகிய காட்சி சில பிரபல சிங்கள திரைப்படங்களில் படமாக்கப்பட்டுள்ளது.